வெற்றிக்கு வித்திட்ட பும்ரா-தோனி கூட்டணியின் அசத்தல் ரன்-அவுட்

வெற்றிக்கு வித்திட்ட பும்ரா-தோனி கூட்டணியின் அசத்தல் ரன்-அவுட்
வெற்றிக்கு வித்திட்ட பும்ரா-தோனி கூட்டணியின் அசத்தல் ரன்-அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியை வெற்றி பெறுவதற்கு பும்ரா-தோனி கூட்டணியின் ரன்-அவுட் முக்கிய காரணமாக அமைந்தது. 

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டில் நேற்று கான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சதம் அடித்தனர். இதனையடுத்து, 338 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியில், முன்ரோ 75, வில்லியம்ஸ்சன் 64, டைலர் 39 ரன்கள் எடுத்து சிறப்பான அடித்தளமிட்டனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிக அளவில் இருந்தது. குறிப்பாக கடைசி நேரத்தில் லாதம், நிகோல்ஸ் ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தது. 

நியூசிலாந்து அணி 46 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்திருந்தது. 24 பந்துகளில் 35 ரன்கள் மட்டும் எடுக்க வேண்டி இருந்தது. 47-வது ஓவரை வீசிய புவனேஸ்குமார் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நிக்கோல்ஸ் விக்கெட்டை சாய்த்தார். இதனால், கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. லாதம்ஸ் 50 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தநிலையில் களத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். 48-வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை கிரண்ட்தோம் அடிக்காமல் விட்டுவிட பந்து விக்கெட் கீப்பர் தோனியின் வசம் சென்றது. அதற்குள் லாதம்ஸ் முன்னோக்கி ஓடி வந்துவிட்டார். இதனை கவனித்த தோனி, பந்தை பும்ராவிடம் வீசினார். பும்ரா அந்த பந்தினை பிடித்து அற்புதமாக லாதம்ஸை ரன் அவுட் செய்தார். பும்ரா அந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

லாதம்ஸ் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட பும்ரா 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி, போட்டியை காண வந்த இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com