ஜஸ்பிரித் பும்ரா, முகமது கைஃப்
ஜஸ்பிரித் பும்ரா, முகமது கைஃப்எக்ஸ் தளம்

”தங்க முட்டையிடும் வாத்தைக் கொன்றுவிடாதீர்கள்” - பும்ராவின் கேப்டன்ஷிப் குறித்து முகமது கைஃப்!

”ஜஸ்பிரித் பும்ராவை முழுநேர கேப்டனாக நியமிப்பதற்கு முன் பிசிசிஐ ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்” என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
Published on

2024-25 பார்டர்- கவாஸ்கர் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து மோசமான வரலாற்றைப் பதிவுசெய்தது. தவிர, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியிலும் பங்கேற்க வாய்ப்பில்லாமல் வெளியேறியுள்ளது. இதனால் இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையான விமரசனங்களை வைத்து வருகின்றனர்.

முக்கியமாக, இந்தத் தொடரின்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இரண்டு போட்டிகளில் (முதல் மற்றும் கடைசி) கேப்டனாகச் செயல்பட்டார். இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றது. ஆனால், கடைசிப் போட்டியில் தோல்வியுற்றது. என்றாலும், இந்தப் போட்டியில் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியிருந்தார். என்றாலும் இந்தத் தொடரில் அவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பும்ரா
பும்ராpt web

இந்த நிலையில், பும்ராவுக்கு கேப்டன்ஷிப் அளித்தது தொடர்பாக முன்னாள் வீரர் முகமது கைஃப், பிசிசிஐயை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஜஸ்பிரித் பும்ராவை முழுநேர கேப்டனாக நியமிப்பதற்கு முன் பிசிசிஐ ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். அவர் விக்கெட்டுகளை எடுப்பதிலும், உடற்தகுதியுடன் இருப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். கூடுதல் தலைமைப் பொறுப்புகள் அவருடைய காயங்களுக்கு வழிவகுக்கும். தங்க முட்டையிடும் வாத்தைக் கொன்றுவிடாதீர்கள். அதேநேரத்தில் பும்ராவுக்குப் பதில் ரிஷப் பண்ட் அல்லது கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பொறுப்பை வழங்கலாம்” என ஆலோசனை வழங்கியுள்ளார்.

முன்னதாகவும், இதே கருத்தை அவர் கூறியிருந்தார். அப்போது அவர், “அணிக்காக தனது உயிரைக் கொடுத்து, அதிக அழுத்தத்துடன், மிகக் குறைவான வேகத்தில் விக்கெட்டை வீழ்த்தும் ஒரே பந்துவீச்சாளர் பும்ராதான். அதனால் அவருக்கு கேப்டன்ஷிப் என்பது ஏற்றதல்ல” எனக் கூறியிருந்தார்.

அடுத்த டெஸ்ட் கேப்டனைப் பற்றிய விவாதங்கள் தொடரும் நிலையில், ​​கைஃப் பரிந்துரையானது, அணியின் நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜஸ்பிரித் பும்ரா, முகமது கைஃப்
திடீரென மைதானத்தில் இருந்து வெளியேறிய பும்ரா.. மருத்துவனையில் ஸ்கேன்.. நாளை பந்துவீசுவது சந்தேகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com