சென்னை 2-வது டெஸ்டில் பும்ரா இல்லாதது ஏன்? - கவுதம் கம்பீர் விளக்கம்

சென்னை 2-வது டெஸ்டில் பும்ரா இல்லாதது ஏன்? - கவுதம் கம்பீர் விளக்கம்

சென்னை 2-வது டெஸ்டில் பும்ரா இல்லாதது ஏன்? - கவுதம் கம்பீர் விளக்கம்
Published on

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா அணியில் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முதல் டெஸ்ட்டில் விளையாடிய பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் நதீம் நீக்கப்பட்டு அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் இந்தியாவின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா சேர்க்கப்படாததற்கு பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆனால், முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இந்திய அணி எடுத்துள்ள இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து "ஸ்டார் ஸ்போர்ட்ஸ்" தொலைக்காட்சியில் பேசிய கவுதம் கம்பீர் "பும்ராவுக்கு ஓய்வளித்தது சரியான முடிவுதான். அடுத்தப் போட்டி பிங்க் பந்தில் பகலிரவாக நடைபெறுகிறது. அதனால், இது ஒரு நல்ல முடிவு" என்றார்.

மேலும் "சென்னை பிட்சில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான அம்சம் ஏதும் இல்லை. ஆஸ்திரேலிய தொடரில் ஏகப்பட்ட ஓவர்களை பும்ரா வீசிவிட்டார். அதனால் இந்தப் போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் முக்கியமான போட்டிகளுக்கு பும்ரா தேவை. அடுத்து அகமதாபாதில் பகலிரவு போட்டி நடைபெறுகிறது, பின்பு 4 ஆவது டெஸ்டுக்கு இடையே பெரிய இடைவெளி இல்லை என்பதால் இந்திய அணியின் இந்த முடிவு சரியானதுதான்" என்றார் கம்பீர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com