அனில் கும்ப்ளே பந்துவீச்சை முயற்சித்த பும்ரா - வீடியோ!

அனில் கும்ப்ளே பந்துவீச்சை முயற்சித்த பும்ரா - வீடியோ!
அனில் கும்ப்ளே பந்துவீச்சை முயற்சித்த பும்ரா - வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே ஸ்டைலில் பந்துவீசிய பும்ராவின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் வலைப் பயிற்சியின்போது கும்ப்ளேவைப் போல் பூம்ரா சுழற்பந்து வீசும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பந்துவீச்சு விதத்தில் கும்ப்ளேவை நகல் எடுப்பதுபோல் பூம்ரா வீசுவது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளை கைப்பற்றியவர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் கும்ப்ளே மட்டும்தான். சர்வதேச கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னேவுக்கு பின்பு அதிக விக்கெட் வீழ்த்தியவர் கும்ப்ளே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com