டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் - லாரா சாதனையை தகர்த்த பும்ரா

டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் - லாரா சாதனையை தகர்த்த பும்ரா
டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் - லாரா சாதனையை தகர்த்த பும்ரா

டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனை படைத்திருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி பெர்மிங்கம்மில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா சதத்தின் துணையுடன் 416 ரன்களை குவித்தது. இந்த இன்னிங்ஸில் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கிய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, ஸ்டுவர்ட் பிராட் வீசிய 84வது ஓவரை எதிர்கொண்டார்.

முதல் பந்தை பும்ரா பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்து வைடு பவுண்டரியாக அமைந்தது. 3வது பந்தை பும்ரா சிக்சருக்கு விளாச, அது நோ பாலாக மாறியது. அடுத்து போடப்பட்ட 3 பந்துகளிலும் ஹாட்ரிக் பவுண்டரிகள் விளாசினார் பும்ரா. 5வது பந்தை மீண்டும் சிக்சருக்கு விளாசிய பும்ரா, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன்மூலம் அந்த ஒரு ஓவரில் மட்டும் 35 ரன்கள் விளாசப்பட்டது. பும்ரா மட்டும் 29 ரன் (4,6,4,4,4,6,1) விளாசினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2003ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாரா ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசி சாதனை படைத்தார். அவரின் இந்த சாதனையை ஆஸ்திரேலிய வீரர் பெய்லே, தென்னாப்பிரிக்க வீரர் மஹாராஜ் ஆகியோர் சமன் செய்தாலும், முறியடிக்க முடியவில்லை. ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிக்கலாம்: கேப்டன்' பும்ராவின் அசத்தல் பந்துவீச்சு - இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com