பாகிஸ்தான்|அணியிலிருந்து திடீரென விலகிய பயிற்சியாளர்.. காரணம் என்ன?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சமீபகாலமாகவே அதிக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில், மீண்டும் அதே அணியில் உள்ள பயிற்சியாளர் ஒருவர் விலகியிருப்பது பேசுபொருளாகி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்ட நிலையில், அவரும் தற்போது தனவு ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜேசன் கில்லெஸ்பி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்னைகளால் விலகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெஸ்ட் அணி தேர்வு குறித்து கில்லெஸ்பி தனது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும், ஆனால், அதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஏற்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.