\
அமெரிக்க ஓபன்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா தோல்வி

அமெரிக்க ஓபன்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா தோல்வி

அமெரிக்க ஓபன்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா தோல்வி
Published on: 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா தோல்வியடைந்தார்.

நடப்பு சாம்பியனான ஜப்பானைச் சேர்ந்த ஒசாகா, 3-வது சுற்று ஆட்டத்தில், கனடாவைச் சேர்ந்த 18 வயது வீராங்கனை லேலா பெர்ணான்டஸை எதிர்கொண்டார். இதில் 5-7, 7- 6, 6-2 என்ற செட் கணக்கில் லேலா வெற்றி பெற்றார். தோல்விக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஒசாகா, சிறிது காலம் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக கண்ணீருடன் கூறினார். மன உளைச்சல் காரணமாக, விம்பிள்டன் தொடரிலிருந்து விலகிய ஓசாகா, டோக்கியோ ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்லவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com