\
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை புற்றுநோயால் மரணம்

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை புற்றுநோயால் மரணம்

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை புற்றுநோயால் மரணம்
Published on

செக்குடியரசை சேர்ந்த பிரபல முன்னாள் டென்னிஸ் வீராங்கனை யானா நவோட்னா 49 வயதில் உயிரிழந்தார். புற்று நோயால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்தது. 

1998-ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் யானா நவோட்னா சாம்பியன் பட்டம் வென்ற பெருமைக்குரியவர். இது தவிர்த்து கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் 16 பட்டங்களை நவோட்னா வென்றுள்ளார். அவரது மறைவுக்கு சர்வதேச டென்னிஸ் சங்க நிர்வாகிகள், முன்னாள் வீரர்-வீராங்கனைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com