பேர்ஸ்டோ காயம்: இங்கிலாந்து அணியில் வின்ஸ்-க்கு மீண்டும் வாய்ப்பு
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவுக்கு பதிலாக வின்ஸ் சேர்க்கப் பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண் டு போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் போது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ பிடித்தார். அப்போது வேகமாக வந்த பந்து அவரது இடதுகை நடுவிரலை பயங்கரமாகத் தாக்கியது. வலியால் துடித்த அவர் வெளியேறினார். அவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பிங்கை கவனித்தார். பேர்ஸ்டோவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. பேர்ஸ்டோ ஓய்வெடுக்க வேண்டும் என்பதால், அவருக்குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வின்ஸ், சில தொடர்களில் கழற்றிவிடப்பட்டார்.
’ஜேம்ஸ் வின்ஸை டெஸ்ட் தொடருக்கு மீண்டும் கொண்டுவருவதற்கு இதுதான் சரியான தருணம் என நினைக்கிறோம்.
சமீபத்தில் நடந்த கவுண்டி போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.