வீசப்பட்ட காலணியில் கால்பந்து விளையாடிய ஜடேஜா!

வீசப்பட்ட காலணியில் கால்பந்து விளையாடிய ஜடேஜா!
வீசப்பட்ட காலணியில் கால்பந்து விளையாடிய ஜடேஜா!

மைதானத்திற்குள் போராட்டக்காரர்கள் வீசிய காலணியை கால்பந்து போல் உதைத்து ஜடேஜா விளையாடினார்.

போராட்டங்களையும் மீறி ஐபிஎல் போட்டி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. ஏராளமான ரசிகர்கள் அதைக்காண குவிந்துள்ளனர். இதற்கிடையே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர், மைதானத்தில் காலணி வீசியும், ஆடைகளை எறிந்தும் காவிரி விவகாரத்திற்காக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். அத்துடன் கட்சிக் கொடிகளையும் உள்ளே கொண்டு சென்று காட்டினர். பின்னர் காலணி வீசிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, அப்புறப்படுத்தினர். இதனால் 2 நிமிடங்கள் மட்டும் போட்டி தடைபட்டது. 

போராட்டக்காரர்கள் வீசிய காலணி சென்னை அணியை சேர்ந்த ஜடேஜாவின் அருகில் விழுந்தது. அந்த காலணியைக் கண்ட ஜடேஜா, விளையாட்டாக அதை கால்பந்து போல் தட்டி எழுப்பி உதைத்தார். அதற்குள் பந்துகளை எடுத்து வீசும் ஊழியர் ஒருவர் வந்து காலணிகளை எடுத்து சென்றார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com