ஆஸ்திரேலிய அணியுடனான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியான இடையே 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. காயம் காரணமாக ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் முதல் 3 போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் விலகியதையடுத்து, ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.