’’தன்னுடைய பேட்டிங்கை நிரூபித்தால்தான்...’’ -ஜடேஜாவை மீண்டும் வம்பிழுத்த மஞ்ச்ரேக்கர்

’’தன்னுடைய பேட்டிங்கை நிரூபித்தால்தான்...’’ -ஜடேஜாவை மீண்டும் வம்பிழுத்த மஞ்ச்ரேக்கர்
’’தன்னுடைய பேட்டிங்கை நிரூபித்தால்தான்...’’ -ஜடேஜாவை மீண்டும் வம்பிழுத்த மஞ்ச்ரேக்கர்

இந்தியாவின் டி20 அணியில் இடம்பெற வேண்டும் எனில் ஜடேஜா அவருடைய பேட்டிங்கை நிரூபிக்க வேண்டும் என்று இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

இந்த மாதம் இறுதியில் ஆசிய கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ஜடேஜா, ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் மூவரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ’’இந்திய வீரர் ஜடேஜா பேட்டிங்க் ஆல்ரவுண்டர் என்ற வீதத்தில் எடுக்கப்பட்டிருந்தால், ஹர்திக் பாண்டியா அல்லது தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாகத்தான் அவர் அணியில் இடம்பெற முடியும். அவ்வாறு எடுக்கப்பட்டிருந்தால் ஜடேஜா அவரது பேட்டிங்கை நிரூபிக்க வேண்டும்’’ என்று இந்தியாவின் முன்னால் கிரிக்கெட் வீரர் சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

ஜடேஜா மீது எப்போதும் ஏதாவது சர்ச்சைக்குறிய விதத்தில் சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் கூறுவதும், அதற்கு ஜடேஜா தனது சிறப்பான ஆட்டத்தால் பதிலடி கொடுப்பதும் வழக்கம் தான். இந்நிலையில் மீண்டும் ஜடேஜாவை வம்புக்கு இழுத்திருக்கிறார் சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com