நாங்க 'ஸ்பின்ல' மட்டும் பார்ட்னர் இல்ல ! பேட்டிங்கில் அசத்திய அஷ்வின், ஜடேஜா 'காம்போ'
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 465 ரன்களை எடுத்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவின் விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற எண்ணத்தில் இன்றைய நாளை தொடங்கியது இலங்கை. ஆனால் அவர்களின் எண்ணம் தவிடுபொடியானது. ஆல் ரவுண்டர்களான ரவிச்சந்திரன் அஷ்வினும், ஜடேஜாவும் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். இதனால் இவர்களின் விக்கெட்டை வீழ்த்த இலங்கை பவுலர்கள் திணறினர்.
இவர்களின் பேட்டிங்கால் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் ஸ்கோரை எட்டியது. ஜடேஜாவுக்கு ஈடுகொடுத்து சிறப்பாக விளையாடிய அஷ்வின் அரைசதமடித்தார். மறுமுனையில் ஜடேஜா தொடர்ந்து சிறப்பாக விளையாடினர். ஆனால் உணவு இடைவேளைக்கு முன்பு அஷ்வின் 61 ரன்கள் எடுத்திருந்தபோது லக்மல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஜடேஜா சிறப்பாக விளையாடி சதமடித்தார். இந்தியாவுக்கா டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா அடித்துள்ள இரண்டாவது சதமாகும்.
இதனையடுத்து 2ஆவது நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 465 ரன்கள் எடுத்துள்ளது.