\
வாழ்நாள் முழுவதும் ஜாக் லீச்சிற்கு இலவச கண்ணாடி - உதவிய பென் ஸ்டோக்ஸ்

வாழ்நாள் முழுவதும் ஜாக் லீச்சிற்கு இலவச கண்ணாடி - உதவிய பென் ஸ்டோக்ஸ்

வாழ்நாள் முழுவதும் ஜாக் லீச்சிற்கு இலவச கண்ணாடி - உதவிய பென் ஸ்டோக்ஸ்
Published on

இங்கிலாந்து வீரர் ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக கண்ணாடி வழங்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஸ்பான்சரான ஸ்பெக் சேவர்ஸ் (SpecSavers) தெரிவித்துள்ளது. 

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்று ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜாக் லீச்சும் கடைசி விக்கெட்டிற்கு 76 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது. 

இந்த ஆட்டத்தில் பேட்டிங்கின் போது இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜாக் லீச் பலமுறை தனது கண்ணாடியை எடுத்து துடைத்து துடைத்து அணிந்தார். இது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் பிறகு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருந்தார். அதில், ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக நல்ல கண்ணாடி வழங்கி உதவி செய்யுமாறு ஸ்பெக் சேவர்ஸ் இடம் முறையிட்டு பதிவு ஒன்றை இட்டிருந்தார். 

இந்நிலையில் இதற்கு ஆஷஸ் தொடரின் ஸ்பான்சரான ஸ்பெக் சேவர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் பதலளித்துள்ளது. அதில், “நாங்கள் ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக கண்ணாடி வழங்க உறுதியளிக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com