டெல்லியை இன்று சந்திக்கிறது சிஎஸ்கே: வருகிறார் டேவிட் வில்லே!

டெல்லியை இன்று சந்திக்கிறது சிஎஸ்கே: வருகிறார் டேவிட் வில்லே!
டெல்லியை இன்று சந்திக்கிறது சிஎஸ்கே: வருகிறார் டேவிட் வில்லே!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை இன்று சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் ! 

பதினோறாவது ஐபிஎல் தொடரில் சென்னை அணி, 7 போட்டியில் விளையாடி 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது. பஞ்சாப், மும்பைக்கு எதிராக தோல்விகளை சந்தித்துள்ளது. மும்பைக்கு எதிராக சனிக்கிழமை நடந்த போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. வெற்றி பெற்றிருக்க வேண்டிய அந்தப் போட்டியை மோசமான பந்துவீச்சால் இழந்தது சிஎஸ்கே. அந்த தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது அணிக்கு. 

சென்னை அணியில் யாராவது ஒரு வீரர், சிறப்பான ஸ்கோரை எடுக்க உதவுகிறார்கள். முதல் போட்டியில் பிராவோ, அடுத்து சாம் பில்லிங்ஸ், வாட்ஷன் என மிரட்டுகிறார்கள். ராயுடு அனைத்துப் போட்டிகளிலும் அசத்துகிறார். சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனியும் வலுவான ஷாட்களால் அதிரடி காட்டுகிறார்கள். இருந்தாலும் கடந்த போட்டியில் சிஎஸ்கே அதிக ரன்களை குவிக்கவில்லை. மிடில் ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்காததால் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. ஜடேஜா, இந்த சீசனில் சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்த வில்லை.

சென்னை அணியின் பந்துவீச்சும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஷர்துல் தாகூர் ரன்களை விட்டுக்கொடுப்பதில் தாராளமாக இருக்கிறார். பிராவோ கச்சிதமாகச் செயல்படுகிறார். தீபக் சாஹர் காயம் காரணமாக இரண்டு வாரம் அணியில் இல்லை. இதனால் இன்றைய போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. சாஹருக்கு பதிலாக இங்கிலாந்தின் வேகம், டேவிட் வில்லே (David willey) களமிறங்குவார் என தெரிகிறது. நேற்று அவர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அதோடு இம்ரான் தாஹிர் உட்கார வைக்கப்பட்டு கரண் ஷர்மா சேர்க்கப்ப டுகிறார். 


டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 7 போட்டியில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசியாக இருக்கிறது. புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற பின், அந்த அணி கொல்கத்தாவை வீழ்த்தியுள்ளது. அதனால் அதிக நம்பிக்கையுடன் சிஎஸ் கேவை இன்று அந்த அணி சந்திக்கும். அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.  பிருத்வி ஷா, காலின் முன்றோ கடந்தப் போட்டியில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருக்கிறார்கள், ரிஷாப் பன்ட், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்களும் இருக்கி றார்கள். பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட் மிரட்டி வருகிறார். 

அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் டெல்லி அணிக்கு. அதனால் அந்த அணி தீவிரம் காட்டும். அடுத்தக் கட்டத்துக்கு நகர சென்னையும் கடுமை காட்டும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். 

இந்த சீசனில் இரு அணிகளும் சந்திப்பது இதுதான் முதல்முறை. ஐ.பி.எல்-லில் இரு அணிகளும் 16 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 11 முறையும், டெல்லி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com