ஊக்கமருந்து பரிசோதனை - டென்னிஸ் வீராங்கனைக்கு தடை

ஊக்கமருந்து பரிசோதனை - டென்னிஸ் வீராங்கனைக்கு தடை

ஊக்கமருந்து பரிசோதனை - டென்னிஸ் வீராங்கனைக்கு தடை
Published on

ஊக்‍கமருந்து பரிசோதனையில் சிக்‍கிய இத்தாலி டென்னிஸ் வீராங்கனை சாரா எர்ரானி 2 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்‍கப்படுவதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இத்தாலியை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சாரா எர்ரானி. இவரிடம் மேற்கொண்ட ஊக்‍க மருந்து பரிசோதனையில், மார்பக புற்றுநோய் சிகிச்சைக்‍கு பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட லெட்ரோசோல் என்ற மருந்தை எர்ரானி பயன்படுத்தியது கண்டுபிடிக்‍கப்பட்டது. ஊக்‍கமருந்து தடுப்பு விதிமுறையை எர்ரானி மீறியிருப்பது தெரியவந்ததை அடுத்து, அவருக்‍கு 2 மாதம் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்‍கப்படுவதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அவர், தனது தாயின் புற்றுநோய் மாத்திரைகளை தான் தவறுதலாக பயன்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com