டெல்லியை வீழ்த்திய சிஎஸ்கே - 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி

டெல்லியை வீழ்த்திய சிஎஸ்கே - 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி

டெல்லியை வீழ்த்திய சிஎஸ்கே - 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி
Published on

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மிகுந்த பரபரப்புக்கு நடுவே சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது தகுதிச் சுற்று விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான ஹர்பஜன் சிங், ஜடேஜா, இம்ரான் தாஹிர் மூவரும் சிறப்பாக பந்துவீசி டெல்லி வீரர்களை கட்டுப்படுத்தினர். அதேபோல், பிராவே, சாஹர் மிகவும் சிறப்பாக பந்துவீசினர். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. ரிஷப் பண்ட் 38 ரன்கள் எடுத்தார். ஹர்பஜன், ஜடேஜா, பிராவோ, சாஹர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 148 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியில் டு பிளிசியஸ் 50(39), ஷேன் வாட்சன் 50(32) ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ரெய்னா 11 ரன்னில் அக்ஸர் ஓவரில் போல்ட் ஆனார். அதேபோல், கடைசி கட்டத்தில் தோனியும் 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. அம்பத்தி ராயுடு 20, பிராவோ 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சென்னை அணி இரண்டு தொடர்களில் விளையாடவில்லை. விளையாடிய 10 தொடர்களில் 8இல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே மூன்று முறை சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது. 4 முறை ரன்னர் அப் ஆகியுள்ளது. 

இதனையடுத்து, ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர் கொள்கிறது. மும்பை அணி ஏற்கனவே மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லும் அணி அதிக முறை ஐபிஎல் தொடரை வென்ற அணி என்ற சிறப்பை பெறும். இதற்கு முன்பாக நான்கு முறை இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com