"இது ஏமாற்றமளிக்கும் முடிவு; ஆனால் மிகவும் பெருமைப்படுகிறேன்": விராட் கோலி

"இது ஏமாற்றமளிக்கும் முடிவு; ஆனால் மிகவும் பெருமைப்படுகிறேன்": விராட் கோலி
"இது ஏமாற்றமளிக்கும் முடிவு; ஆனால் மிகவும் பெருமைப்படுகிறேன்": விராட் கோலி

இது ஏமாற்றமளிக்கும் முடிவு, ஆனால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று நேற்றையை ஐபிஎல் போட்டியில் தோல்வியடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ட்வீட் செய்திருக்கிறார்.

இது தொடர்பான விராட் கோலியின் ட்வீட்டில், “இது நாங்கள் விரும்பிய முடிவு அல்ல, ஆனால் போட்டி முழுவதையும் வீரர்கள் எதிர்கொண்ட தன்மையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது ஒரு ஏமாற்றமளிக்கும் முடிவு. ஆனால் நாம் தலையை நிமிர்த்திக்கொள்ளலாம். எங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவு அளிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும், நிர்வாகத்திற்கும், அணியின் ஊழியர்களுக்கும் நன்றிஎன தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டரில் விளையாடின. இந்த ஆட்டத்தில் இறுதி ஓவர்வரை பெங்களூர் அணி போராடி தோற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com