சேஹல் பந்தை குறிவைத்து விளாசினேனா? தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் விளக்கம்

சேஹல் பந்தை குறிவைத்து விளாசினேனா? தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் விளக்கம்
சேஹல் பந்தை குறிவைத்து விளாசினேனா? தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் விளக்கம்

சேஹல் பந்தை திட்டமிட்டு விளாசவில்லை என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் கிளாசன் கூறினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் கிளாசன், 30 பந்துகளில் 69 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது. 

வெற்றிக்குப் பின் அவர் கூறும்போது, ‘சேஹல் பந்தை இந்தப் போட்டியில் எளிதாக கையாண்டது மகிழ்ச்சியளிக்கிறது. நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது, சில சிறந்த லெக்ஸ்பின்னர்கள் பந்துவீசினார்கள். அவர்களின் பந்துகளை அடிப்பது எனக்குப் பிடிக்கும். நாங்கள் விளையாட்டாகப் பேசிக்கொள்வோம், ‘அந்த லெக்ஸ்பின்னரை பதம் பார்க்க வேண்டும்’ என்று. சில நேரங்களில் அது ஒர்க் அவுட் ஆகும். இன்றும் (நேற்று) அப்படித்தான் ஒர்க் அவுட் ஆனது. என்னால் முடிந்த அளவு அடித்து ஆடினேன். இது திட்டமிட்டு நடந்தது அல்ல. முதலில் இரண்டு பவுண்டரிகளை அடித்தேன். பிறகு அடித்து ஆட ஆரம்பித்துவிட்டேன். 

கேப்டன் டுமினியும் சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்தார். செஞ்சுரியன் மைதானம் என் சொந்த மைதானம். நாட்டுக்காக இங்கு ஆட வேண்டும் என்கிற எனது சிறு வயது கனவு நனவாகியிருக்கிறது. இங்கு நிலைத்து நின்று ஆடி வெற்றித் தேடி தந்ததில் எனக்கு மகிழ்ச்சி. தென்னாப்பிரிக்க அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். விக்கெட் கீப்பர் டி காக், டி வில்லியர்ஸ், டுபிளிசிஸ் ஆகியோரின் காயம் காரணமாக எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறேன்’ என்றார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com