‘அந்த பவுலர்களிடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் ‘- வாட்சன் 

‘அந்த பவுலர்களிடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் ‘- வாட்சன் 

‘அந்த பவுலர்களிடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் ‘- வாட்சன் 
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஃபார்முக்கு திரும்பி உள்ள நிலையில், டி20 போட்டிகளில் டாப் 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலராக உள்ள அந்த இந்தியரின் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவது கொஞ்சம் சவாலான காரியம் என சொல்லியுள்ளார். 

அண்மையில் டி20 ஸ்டார்ஸ் என்ற யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்த வாட்சனிடம் டி20 போட்டிகளில் டாப் 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களை பிக் செய்யும்படி நெறியாளர் கேட்டபோது தனது பதிலை சொல்லியுள்ளார் வாட்சன். 

“இலங்கையின் மலிங்காவும், பாகிஸ்தானின் ஷஹீத் அப்ரிடியும் இந்த பட்டியலில் டாப் இரண்டு இடங்களில் உள்ளனர்.

மூன்றாவது இடத்தில் இருப்பவர் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா. வேகம், ஸ்விங், யார்க்கர் என வெரைட்டியாக பந்துவீசி பும்ரா அசத்துவார். எல்லோரும் தங்களது பந்து வீச்சில் வெரைட்டி கொடுத்தாலும் பும்ரா அதில் ஏற்படுத்துகின்ற தாக்கம் வேற லெவலாக இருக்கும். அசாத்திய திறன் படைத்த  அவரது வீச்சை எதிர்கொண்டு விளையாடுவதே சவாலாக இருக்கும். 

அவருக்கு வயதும் 26 என்பதால் அடுத்தடுத்த நாட்களில் மேலும் தாக்கத்தை அவர் ஏற்படுத்தலாம்” என வாட்சன் சொல்லியுள்ளார். 

நான்காவது இடத்தில் சி.எஸ்.கே அணியின் டீம் மெட்டான பிராவோவும், ஐந்தாவது இடத்தில் சுனில் நரைனும் வாட்சனின் டாப் 5 பவுலர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com