வயசெல்லாம் ஒரு மேட்டரா பாஸ்? கேட்கிறார் ’மிஸ்டர் கூல்!

வயசெல்லாம் ஒரு மேட்டரா பாஸ்? கேட்கிறார் ’மிஸ்டர் கூல்!

வயசெல்லாம் ஒரு மேட்டரா பாஸ்? கேட்கிறார் ’மிஸ்டர் கூல்!
Published on

வயசெல்லாம் ஒரு மேட்டரா பாஸ்: கேட்கிறார் ’மிஸ்டர் கூல்!

’கிரிக்கெட் வீரர்களுக்கு வயது பிரச்னையில்லை, ஆனால் உடற்தகுதி முக்கியம்’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறினார்.

ஐபிஎல் இறுதி போட்டியில் சாம்பியன் படத்தை மூன்றாவது முறையாக நேற்று வென்றது சிஎஸ்கே. மும்பை வான்கடே மைதானத்தில் ஐதராபாத் அணியுடன் நேற்று மோதிய சிஎஸ்கே, டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி வீரர்கள் முதலில் தடுமாறி பிறகு விளாசியதால், அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லி யம்சன் 36 பந்துகளில் 47 ரன்களும் யூசுப் பதான் 25 பந்துகளில் 45 ரன்களும், பிராத்வெயிட் 11 பந்துகளில் 21 ரன்களும் விளாசி னர். சென்னைத் தரப்பில் நிகிடி, தாகூர், கரண் ஷர்மா, பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் ரன் குவிக்க திணறியது. டு பிளசிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஷேன் வாட்சனுடன், சுரேஷ் ரெய்னா இணைந்த பின் போட்டியில் புயல் கிளம்பியது. வாட்சன் 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். சந்தீப் சர்மா வீசிய 13 ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்சர்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். ரெய்னா 32 ரன் களில் வெளியேறினார். சிக்சர் மழை பொழிந்த வாட்சன் 51 பந்துகளில் சதமடித்தார். இந்த ஐபில் தொடரில் இது அவரது இரண்டாவது சதம். சென்னை அணி 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. வாட்சன் 117 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்ட நாயக ன் விருது வழங்கப்பட்டது.

இந்த வருட ஐபிஎல் ஏலம் நடந்ததில் இருந்தே, சென்னை அணியில் சீனியர் வீரர்கள்தான் அதிகம் என்று விமர்சிக்கப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ’சீனியர்கள்னா அனுபவம்’ என்று நிரூபித்திருக்கிறார்கள் சிஎஸ்கே வீரர்கள்.

இந்நிலையில் வெற்றிக்குப் பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனியிடம், வீரர்களின் வயது பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர், ’வீரர்களுக் கு வயது ஒரு பிரச்னையில்லை. ஆனால் உடற்தகுதி முக்கியம். உதாரணமாக ராயுடுவை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு 33 வயது. ஆனால், முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். பீல்டிங்கின் போது மைதானத்தில் அருமையாகச் செயல்படுகிறார். பல போட்டிகளில் முழு நேரமும் அவர் மைதானத்தில் செலவிட்டிருக்கிறார். அவர் ஒருபோதும் புகார் சொன்னதில்லை. அதனால் வயதை விட பிட்னஸ்தான் முக்கி யம். கேப்டன்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால், வீரர்கள் பீல்டிங்கின் போது நன்றாக அங்கும் இங்கும் ஓட வேண்டும் என்பதைத்தான். அவர் எந்த வருடத்தில் பிறந்தார் என்பது முக்கியமல்ல’ என்றார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com