முதல் டெஸ்ட்: ராகுல், தவான் அவுட்: தடுமாறுது இந்தியா!
இந்திய அணி வெறும் 13 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா- இலங்கை அணிகள் மோதல் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. காலையில் பெய்த மழை காரணமாக, நண்பகல்தான் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலிலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.
அதன்படி இந்திய அணி வீரர்கள் கே.எல்.ராகுலும், தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். போட்டியின் முதல் பந்தை வீசிய லக்மல், ராகுலின் விக்கெட்டை வீழ்த்தினார். 6.2 வது ஓவரில் லக்மலே, தவானின் விக்கெட்டையும் சாய்த்தார். அவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்திய அணி வெறும் 13 ரன்களுக்குள் 2 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.
மழை காரணமாக பிட்ச்சின் தன்மை மாறியுள்ளது. முதல் இரண்டு நாள், பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இலங்கை வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.