ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா அணிகள் இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா அணிகள் இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா அணிகள் இன்று மோதல்
Published on

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி, இன்று தனது முதல் போட்டியில் கோவா அணியுடன் மோதுகிறது.

கால்பந்து ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நான்காவது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கடந்த 17ஆம் தேதி கொச்சியில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் எந்த அணியும் கோல் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி கோவா அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தப்போட்டி நேரு விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இவ்விரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com