\
ஐஎஸ்எல் கால்பந்து: டெல்லி அணியை பந்தாடிய மும்பை

ஐஎஸ்எல் கால்பந்து: டெல்லி அணியை பந்தாடிய மும்பை

ஐஎஸ்எல் கால்பந்து: டெல்லி அணியை பந்தாடிய மும்பை
Published on: 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி அணி, நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்று நடைப்பெற்ற லீக் போட்டியில் மும்பை சிட்டி அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் மோதின. இந்தப்போட்டி மும்பையில் நடைப்பெற்றது. 

சிறப்பாக செயல்பட்ட மும்பை அணி 4-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியை வீழ்த்தியது. மும்பை அணியில் எவர்டன் சாண்டோஸ் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம், மும்பை சிட்டி அணி புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com