\
ஐஎஸ்எல் கால்பந்து: டெல்லி - கோவா பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து: டெல்லி - கோவா பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து: டெல்லி - கோவா பலப்பரீட்சை
Published on: 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் எஃப்.சி கோவா - டெல்லி அணிகள் மோதுகின்றன.

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இன்று நடைபெறும் போட்டியில்  எஃப்.சி கோவாவும் - டெல்லி அணியும் மோதுகின்றன. இந்தப்போட்டி டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. எஃப்.சி கோவா அணி இதுவரை விளையாடியுள்ள 4போட்டிகளில் 3ல் வெற்றி 1ல் தோல்வியடைந்து 9 புள்ளிகளுடன் தரநிலையில் நான்காவது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி தரநிலையில் முன்னேறும் வாய்ப்பு உள்ளது. டெல்லி அணி இதுவரை விளையாடி 4போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்தப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் டெல்லி அணி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com