\
ஐஎஸ்எல் கால்பந்து: சென்னைக்கு‌ 2ஆவது தோல்வி

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னைக்கு‌ 2ஆவது தோல்வி

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னைக்கு‌ 2ஆவது தோல்வி
Published on: 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி.அணி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.

நான்காவது ஐஎஸ்எல் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இதில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் சென்னையின் எஃப் சி அணி, மும்பை அணியை எதிர்கொண்டது. இந்தப்போட்டி மும்மையில் நடைப்பெற்றது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப் சி அணியை மும்பை வீழ்த்தியது. முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்து பின் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சென்னை அணியை மும்பையிடம் தோல்வியை சந்திள்ளது. சென்னை அணி இதுவரை 5 ஆட்டங்களில் 3 வெற்றி, 2தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று தரநிலையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com