\
ஐஎஸ்எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது புனே

ஐஎஸ்எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது புனே

ஐஎஸ்எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது புனே
Published on: 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நடப்பு சீசனில் புனே சிட்டி அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. 

நான்காவது ஐஎஸ்எல் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இதில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி, புனே சிட்டி எஃப் சி அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப்போட்டி  ஜாம்ஷெட்பூரில் நடைபெற்றது.

விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் புனே சிட்டி எஃப் சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்தின் 30-ஆவது நிமிடத்தில் ஆடில் கான் அடித்த கோல் புனே அணிக்கு வெற்றியை தேடித்தந்தது. புனே அணி 9 புள்ளிகளுடன் தரநிலையில் நான்காவது இடத்தில் உள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com