\
ஐஎஸ்எல் கால்பந்து: கோவா அணிக்கு 4-ஆவது வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து: கோவா அணிக்கு 4-ஆவது வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து: கோவா அணிக்கு 4-ஆவது வெற்றி
Published on: 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. 

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்றுப்போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இதில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் டெல்லி டைனமோஸ் அணியை எதிர்த்து கோவா அணி விளையாடியது. இந்தப்போட்டி டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது.இந்தப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கோவா அணியினர் டெல்லி வீரர்களுக்கு கோல் அடிக்க வாய்ப்பே வழங்கவில்லை.

கோவா அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி 1ல் தோல்வியடைந்து 12 புள்ளிகளுடன் தரநிலையில் முதலிடத்திற்கு முன்னேறியது. கோவாவிடம் தோல்வியடைந்த டெல்லி டைனமோஸ் அணி 5 போட்டிகளில் 1வெற்றி 4தோல்விகளுடன் 3புள்ளிகளை பெற்று தரநிலையில் 9வது இடத்தில் உள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com