நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவ டெஸ்ட்: இஷாந்த் ஷர்மா விலகல் !

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவ டெஸ்ட்: இஷாந்த் ஷர்மா விலகல் !
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவ டெஸ்ட்: இஷாந்த் ஷர்மா விலகல் !

நியூசிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விலகியுள்ளார்.

அனுபவ வீரரான இஷாந்த் சர்மா, கணுக்கால் காயத்திலிருந்து அண்மையில் மீண்டு நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். இந்நிலையில், இஷாந்த் சர்மாவுக்கு கணுக்கால் பகுதியில் மீண்டும் வலி ஏற்பட்டதால் அவர் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆடும்‌ லெவனில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியின் போது இஷாந்த் சர்மா தன்னுடைய உடல்நிலைக் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார், அப்போது, “நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் சரியாக தூங்கவேயில்லை. மிகவும் சிரமப்படுகிறேன். நான் விரும்பிய விதத்தில் என்னால் பந்துவீச முடியவில்லை. அணி நிர்வாகம் என்னைக் கேட்டுக் கொண்டதால் விளையாடினேன். அணிக்காக எதனையும் செய்வேன். மகிழ்ச்சியாக இல்லை என்பது பந்துவீசுவதில் அல்ல. என்னுடைய உடல்நிலை மகிழ்ச்சிகரமாக இல்லை" என தெரிவித்திருந்தார்.

மேலும் தொடர்ந்த அவர் " தூக்கமின்மை, தலைவலி, தலைச்சுற்றல், சோர்வு மற்றும் ஆற்றல் இழப்பு ஆகியவற்றில் இருந்து எவ்வளவு தூரம் மீண்டு வருகிறேனோ அவ்வளவு தூரம் என்னால் களத்தில் பந்துவீச முடியும். நன்றாக தூங்கினாலே நன்றாக மீண்டுவிடுவேன்” என்று வலியுடன் கூறியிருந்தார். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான் இரண்டாவது டெஸ்டில் இருந்து இஷாந்த் சர்மா விலக்கி வைக்க அணி நிர்வாகம் முடிவு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com