இஷாந்த் சர்மா விரல்களில் காயம்: மருத்துவ ஆலோசனைப்படி தையல்

இஷாந்த் சர்மா விரல்களில் காயம்: மருத்துவ ஆலோசனைப்படி தையல்
இஷாந்த் சர்மா விரல்களில் காயம்: மருத்துவ ஆலோசனைப்படி தையல்

இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் நடு மற்றும் இன்னொரு விரலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவ ஆலோசனைப்படி அவருக்கு தையல் போடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் இஷாந்த் சர்மா. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் விக்கெட் ஏதும் கைப்பற்ற முடியவில்லை.

இந்நிலையில் கடைசி நாள் ஆட்டத்தின்போது ராஸ் டெய்லருக்கு வீசிய பந்தை தானே தடுக்க முயன்றபோது இஷாந்துக்கு கைவிரல்களில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இஷாந்தின் விரல்களில் கடுமையான காயம் ஏற்பட்டதால் அவரின் நடு விரலிலும், நான்காம் விரலிலும் 10 தையல்களுக்கு மேல் போடப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி கூறும்போது "இஷாந்தின் தையல்  காயம் 10 நாள்களில் சரியாகிவிடும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்க 6 வார காலம் இருப்பதால், அவர் போட்டிக்கு தயாராகிவிடுவார்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com