கபில் தேவ் சாதனையை முறியடித்த இஷாந்த் சர்மா

கபில் தேவ் சாதனையை முறியடித்த இஷாந்த் சர்மா

கபில் தேவ் சாதனையை முறியடித்த இஷாந்த் சர்மா
Published on

இந்திய பந்துவீச்சாளர்களில் இங்கிலாந்து ஆடுகளத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முன்னாள் வீரர் கபில் தேவின் சாதனையை இஷாந்த் சர்மா முறியடித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை சேர்த்தனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவான் கான்வே அரை சதமடித்தார். இதில் மற்றொரு தொடக்க வீரரான டாம் லேதம் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நேற்றையப் போட்டியில் டேவான் கான்வே 54 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த விக்கெட்டின் மூலம் இங்கிலாந்து ஆடுகளங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் இஷாந்த் சர்மா. மொத்தம் இங்கிலாந்தில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் 13 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com