"தோனியை கடுப்பாக்கினேன்"- இஷாந்த் சர்மா ஓபன் டாக்

"தோனியை கடுப்பாக்கினேன்"- இஷாந்த் சர்மா ஓபன் டாக்

"தோனியை கடுப்பாக்கினேன்"- இஷாந்த் சர்மா ஓபன் டாக்
Published on

கடந்தாண்டு ஐபிஎல் போட்டியின்போது தன்னுடைய பேட்டிங்கால் தோனியை கடுப்பாக்கினேன் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகெங்கிலும் பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீர்ரகள் பலர் சமூகவலைத்தளம் மூலமாக ரசிகர்களிடையே உரையாற்றி வருகின்றனர்.

இதில் சில வீரர்கள் சமூக வலைத்தளம் மூலமாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து வருகின்றனர். அப்படி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இஷாந்த் சர்மா தோனி குறித்து மகிழ்வான தருணங்களை பகிர்ந்துள்ளார். அதில் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடந்தப் போட்டி குறித்து விவரித்துள்ளார். அந்தப் போட்டியில் தோனியை எவ்வாறு வெறுப்பேத்தினேன் என தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் "கடந்தாண்டு ஐபிஎல் போட்டியின்போது நான் சிஎஸ்கேக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்ய வந்தேன். அப்போது ஸ்டம்புக்கு பின்னாடியிருந்த மஹி பாய் (தோனி) என்னிடம் "உன்னால் சிக்ஸர் அடிக்க முடியாது; உனக்கு அந்தளவுக்கெல்லாம் திறமை இல்லை" என கிண்டலடித்தார். அப்போது ஜடேஜா வீசிய முதல் பந்தை 4 ரன்னுக்கு விரட்டினேன்" என்றார் இஷாந்த் சர்மா.

மேலும் தொடர்ந்த அவர் "இதற்கடுத்து ஜடேஜா வீசிய அடுத்தப் பந்தை சிக்ஸருக்கு அடித்தேன். அப்போது மஹி பாயின் முக்ததை திரும்பி பார்த்தேன், அவர் மிகவும் எரிச்சலுடன் ஜடேஜாவை பார்த்து திட்டிக்கொண்டு இருந்தார்" என்றார் இஷாந்த் சர்மா. அந்தப் போட்டியில் இறுதியாக சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com