இஷாந்த், அஸ்வினுக்காக அணி தேர்வை தள்ளி வைத்த பிசிசிஐ!

இஷாந்த், அஸ்வினுக்காக அணி தேர்வை தள்ளி வைத்த பிசிசிஐ!
இஷாந்த், அஸ்வினுக்காக அணி தேர்வை தள்ளி வைத்த பிசிசிஐ!

வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ர், 5 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் அந்த அணி பங்கேற்கிறது. அடுத்த மாதம் 4 ஆம் தேதி, முதல் டெஸ்ட் போட்டி, தொடங்குகிறது. அக்டோபர் 21 ஆம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கி, நவம்பர் 1 ஆம் தேதி வரை நடக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்கான இந்திய அணி தேர்வு நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் அந்தக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடரில் மூத்த வீரர்களான இஷாந்த் சர்மாவும் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வினும் காயமடைந்தனர். அவர்களுக்கான பிட்னஸ் டெஸ்ட் வரும் சனிக்கிழமை பெங்களூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் நடக்கிறது. அதில் அவர்களின் உடல்நிலையை பார்த்துவிட்டு 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடாத தொடக்க ஆட்டக்காரர் தவான், இந்த தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிகி றது. அவருக்கு பதிலாக பிருத்வி ஷா சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. அதே போல கர்நாடக தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அக்ர்வாலும் அணிக்கு தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இங்கிலாந்தில் கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஹனுமா விஹாரிக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com