தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக விளையாடும் இந்திய போர்டு பிரசிடெண்ட் லெவன் அணிக்கு இஷான் கிஷான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது, இந்திய கிரிக்கெட் அணி. டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர் முடிந்ததை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஆகஸ்டு 1ஆம் தேதியும், 2 வது போட்டி லண்டனில் ஆகஸ்ட் 9 ஆம் தேதியும், 3 வது போட்டி நாட்டிங்காமில் 18 ஆம் தேதியும், 4 வது போட்டி சவுதாம்டனில் ஆகஸ்ட் 30 ஆம் தேதியும், 5 வது மற்றும் கடைசி போட்டி லண்டனில் செப்டம்பர் 7ஆம் தேதியும் நடக்க இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ரிஷப் பான்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
அணி வருமாறு:
விராத் கோலி (கேப்டன்), தவான், கே.எல். ராகுல், முரளி விஜய், புஜாரா, ரஹானே, கருண்நாயர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பன்ட், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர்.
இதற்கிடையே தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான மூன்று நாள் போட்டிக்கான வீரர்களும் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதற்கு இஷான் கிஷான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த இஷான் கிஷான் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளை யாடியவர். அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் தலைமையில் போர்ட் பிரசிடென்ட் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்:
இஷான் கிஷான் (கேப்டன்), சஞ்சய், ஈஸ்வரன், துருவ் ஷோரி, அன்மோல் ப்ரீத் சிங், ரிக்கி பு, ஜலாஜ் சக்சேனா, சித்தேஷ் லத், மிஹிர் ஹிர்வானி, ஜடேஜா, அவேஸ் கான், ஷிவம் மவி, இஷான் பரேல், அதித் சேத்.