இஷான் கிஷன் அதிரடி! ராஜஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மும்பை!
நடப்பு ஐபிஎல் சீசனின் 51-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்தது.
அந்த சுலப இலக்கை விரட்டியது மும்பை. கேப்டன் ரோகித் மற்றும் இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் 22 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் அவுட்டானார். இருந்தும் மறுமுனையில் இருந்த இஷான் கிஷன் 25 பந்துகளில் 50 ரன்களை விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.
முடிவில் 8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது மும்பை. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது மும்பை.
அதே நேரத்தில் மோசமான பேட்டிங் பார்மினால் அவதிப்பட்டு வந்த கிஷன் இந்த இன்னிங்ஸ் மூலம் இழந்த பார்மை மீட்டெடுத்துள்ளார். புள்ளிப்பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது மும்பை.