அதுதான் டர்னிங் பாயின்ட்: ரோகித் சர்மா நெகிழ்ச்சி!

அதுதான் டர்னிங் பாயின்ட்: ரோகித் சர்மா நெகிழ்ச்சி!

அதுதான் டர்னிங் பாயின்ட்: ரோகித் சர்மா நெகிழ்ச்சி!
Published on

இஷான் கிஷானின் சிறப்பான ஆட்டம்தான் எங்கள் அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 41வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின. முதலில் களமிறங்கிய மும்பை அணி விக்கெட் கீப்பர் இஷான் கிஷானின் அதிரடியால் 210 ரன்கள் குவித்தது. இஷான் கிஷான் 21 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 36 ரன்களும் கேப்டன் ரோகித் 36 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிரடியாக 21 பந்துகளில் 62 ரன்கள் விளாசிய இஷான் கிஷானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 
 
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது மும்பை இண்டியன்ஸ் அணி. கொல்கத்தா அணி, 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் அடுத்த இடத்துக்கு இறங்கியுள்ளது. 

(இஷான் கிஷான்)

போட்டிக்குப் பின் பேசிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா, ’ஒன்றாக இணைந்து மீண்டும் வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். இஷான் கிஷானின் ஆட்டம் பிரமிப்பாக இருந்தது. அவர் பந்துகளை பயமின்றி விளாசியதுதான் இந்தப் போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் போட்டியில் அடித்து ஆடுவது எளிதானதல்ல. பந்து சரியாக பேட்டுக்கு வரவில்லை. இஷான், ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். எல்லா புகழும் அவரையே சேரும். இந்த வாய்ப்புக்காக அவர் காத்தி ருந்தார். அதே போல பென் கட்டிங்கும் கடைசிகட்டத்தில் சிறப்பாக முடிந்தார்’ என்றார்.

கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறும்போது, ’200- ரன்களுக்கு மேல் என்பது கடினமான இலக்குதான். சில கேட்ச்களை விட்டுவிட்டோம். அதைப் பிடித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? இது பேட்டிங் பிட்ச்-சாக இருந்தாலும் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. பவர்பிளே-யில் நாங்கள் முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இதனால் கடினமாகிவிட்டது. மும்பை அணி, எங்களுக்கு எதிராக சில சாதனைகளை வைத்திருந்தும் இதை சாதாரண ஆட்டமாக நினைத்துவிட்டோம். எங்கள் திறமை யை இன்னும் அதிகப்படுத்த வேண்டும், அதோடு நம்பிக்கையும் வேண்டும். ஒரு கேப்டனாக நானும் நிமிர வேண்டும். எங்கள் வீரர்களை நம்புகிறேன்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com