‘11 சிக்ஸர், 19 பவுண்டரிகள் விளாசல்’ 94 பந்துகளில் 173 ரன்கள் எடுத்து இஷான் கிஷன் சாதனை!

‘11 சிக்ஸர், 19 பவுண்டரிகள் விளாசல்’ 94 பந்துகளில் 173 ரன்கள் எடுத்து இஷான் கிஷன் சாதனை!

‘11 சிக்ஸர், 19 பவுண்டரிகள் விளாசல்’ 94 பந்துகளில் 173 ரன்கள் எடுத்து இஷான் கிஷன் சாதனை!
Published on

விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் மத்திய பிரதேசம் அணிக்கு எதிராக 94 பந்துகளில் 173 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார் ஜார்கண்ட் கேப்டன் இஷான் கிஷன்.

விஜய் ஹசாரே 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. இதில் ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான இஷான் கிஷன் 94 பந்துகளில் 173 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில் 11 சிக்ஸர்களும் 19 பவுண்டரிகளும் அடங்கும்.

இஷான் கிஷன் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுபவர். கடந்த சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன்களை விளாசியவர் இஷான் கிஷன். கடந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 516 ரன்களை எடுத்தார் இஷான் கிஷன். இந்நிலையில் இன்றையப் போட்டியில் இஷான் கிஷன் விளாசலில் 50 ஓவர் முடிவில் ஜார்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து உள்நாட்டுப் போட்டியில் 50 ஓவர் ஆட்டத்தில் அதிகபட்ச ரன்கள் எடுத்த அணியாக இருக்கிறது ஜார்கண்ட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com