"என் பயிற்சியாளரின் தந்தைக்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணிக்கிறேன்" இஷான் கிஷன் உருக்கம்

"என் பயிற்சியாளரின் தந்தைக்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணிக்கிறேன்" இஷான் கிஷன் உருக்கம்
"என் பயிற்சியாளரின் தந்தைக்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணிக்கிறேன்" இஷான் கிஷன் உருக்கம்

தனக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதை அண்மையில் காலமான என் பயிற்சியாளரின் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தெரிவித்தார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று அகமதாபாதில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி இந்தியா வெற்றிப்பெற்றது. இதில் இந்தியாவுக்கு அறிமுகமான முதல் போட்டியிலேயே தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 56 ரன்கள் விளாசினார். இதனையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இது குறித்து போட்டிக்கு பின்பு பேசிய "முதல் போட்டியில் விளையாடுவது எப்போதும் அவ்வளவு எளிதானதல்ல. மும்பை இந்தியன்ஸ் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறது.நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏராளமான மூத்த வீரர்களுடன் விளையாடி இருக்கிறேன் அவர்கள் எனக்கு நிறைய அறிவுறைகளை கொடுத்து இருக்கிறார்கள். நான் எப்போதும் ரிவர்ஸ் ஸ்வீப் சிறப்பாக விளையாடுவேன். ஆனால் இன்றைக்கு அதனால் அவுட்டாகிவிட்டேன்" என்றார்.

மேலும் பேசிய அவர் "நான் முழுவதும் விளையாடி இறுதிவரை நின்று போட்டியை முடிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவுட்டானது சற்றே என்னை சோகத்தில் ஆழ்த்தியது. டாம் கரன் வீசிய பந்தை சிக்ஸருக்கு விரட்டியபோதுதான் எனக்கு இந்தப் போட்டியின் மீதும் என் மீதும் நம்பிக்கை பிறந்தது. அதன் பின்புதான் தொடர்ந்து அதிரடியாக விளையாடினேன். இப்போது நான் இந்த இடத்தில் இருப்பதை மகிழ்ச்சியாக நினைக்கிறேன். இந்த ஆட்டத்தை அண்மையில் மறைந்த என் பயிற்சியாளரின் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்" என்றார் இஷான் கிஷன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com