“மெதுவாக விளையாடுவது எப்படி என தோனியிடம் கற்றுக் கொண்டேன்” - இஷ் சோதி

“மெதுவாக விளையாடுவது எப்படி என தோனியிடம் கற்றுக் கொண்டேன்” - இஷ் சோதி
“மெதுவாக விளையாடுவது எப்படி என தோனியிடம் கற்றுக் கொண்டேன்” -  இஷ் சோதி

டி20 போட்டியை இவ்வளவு மெதுவாக விளையாட முடியும் என்பது தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டதாக இஷ் சோதி கூறியுள்ளார். 

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பாதி லீக் போட்டிகள் முடிந்துவிட்டன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை விளையாடி முடித்திருக்கின்றன. இன்று நடைபெறும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இந்நிலையில், டி20 போட்டியின் தன்மையை எப்படி புரிந்து கொள்வது என்பதை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் இஷ் சோதி கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ஒரு போட்டியில் தன்னுடைய பங்களிப்பு செலுத்த வேண்டும் என்பது ஒரு வீரருக்கு மனரீதியாக தெளிவு இருக்க வேண்டும். அந்த வகையில் ஒரு போட்டியை புரிந்து கொண்டு தோனி விளையாடும் தன்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு டி20 போட்டியை மிகவும் மெதுவாக விளையாடி தனக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து கொண்டு வெற்றியை நோக்கி போட்டியை அழைத்துச் செல்வார்.

இதுபோல், மெதுவாக விளையாடினால் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது. ஆனால், ஆனால் கடைசி நேரத்தில் விளையாடுபவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கும். நிதானமாக விளையாடும் போது, போட்டியை இறுதிவரை நெருக்கமாக கொண்டு செல்ல முடியும், அதேபோல் தொடர்ச்சியாக ரன்களை எடுக்க முடியும்”   என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சோதியை ஏலம் எடுத்திருந்தாலும், அவர் இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் களமிறக்கபடவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com