'கேப்டன் தகுதி அவரிடம் இருக்கிறதா?' - ரோகித் சர்மாவை வெளுத்து வாங்கிய கபில்தேவ்

'கேப்டன் தகுதி அவரிடம் இருக்கிறதா?' - ரோகித் சர்மாவை வெளுத்து வாங்கிய கபில்தேவ்

'கேப்டன் தகுதி அவரிடம் இருக்கிறதா?' - ரோகித் சர்மாவை வெளுத்து வாங்கிய கபில்தேவ்
Published on

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அந்தப் பதவிக்கு ஏற்ற உடல் தகுதியுடன் இல்லை என்று விமர்சித்துள்ளார் கபில் தேவ். 

இந்திய கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என மொத்தமாக 68 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இந்த 68 போட்டிகளில் ரோகித் சர்மா மொத்தமே 39 போட்டிகளில்தான் விளையாடி இருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு அவருக்கு பல போட்டிகளில் ஒய்வு கொடுக்கப்பட்டது.  இதுவொரு காரணமாக இருந்தாலும், ரோகித் சர்மா காயம் காரணமாக பலவேறு முக்கியத் தொடர்களில் வெளியேறியது மற்றொரு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், ஒரு கிரிக்கெட் வீரருக்கு தேவையான உடல் தகுதி ரோகித் சர்மாவிடம் இருக்கிறதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ். இதுதொடர்பாக அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில், ''ரோகித் சர்மாவை பற்றி எந்த குறையும் சொல்ல முடியாது. ஒரு கிரிக்கெட் வீரருக்கு தேவையான அனைத்தும் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவருடைய உடல் தகுதியை குறித்து எப்போது பேசினாலும் பெரிய கேள்விக்குறி இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரருக்கு தேவையான உடல் தகுதி அவரிடம் இருக்கிறதா? ஏனென்றால் ஒரு கேப்டனுடைய உடல் தகுதி மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். கேப்டனை போல் நாமும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என சக அணி வீரர்கள் நினைக்க வேண்டும். சக வீரர்கள் தங்களுடைய கேப்டனை பெருமையாக கருத வேண்டும். ஆனால் ரோகித் சர்மா விஷயத்தில் அப்படி இல்லை.

ரோகித் சர்மா கேப்டனானப் பிறகு அதிகமாக ரன்கள் அடிக்கவில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆனால் அது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் அவருடைய கிரிக்கெட் திறமையில் எந்த குறையும் இல்லை. அவர் இந்திய அணியின் வெற்றிகரமான வீரராக திகழ்ந்து வருகிறார். ஆனால் ரோகித் சர்மா மட்டும் தன்னுடைய உடல் தகுதியில் கவனம் செலுத்தினால் ஒட்டுமொத்த அணியும் அவரை பின்பற்றும்'' என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

தவற விடாதீர்: எந்த வீரரும் செய்யாத புதிய சாதனை படைத்த சூர்யகுமார்!இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com