இந்திய அணிக்கு தோல்வி பயம் காட்டிய லிட்டன் தாஸ்! மழைக்கு பின் இதுதான் இலக்கு!

இந்திய அணிக்கு தோல்வி பயம் காட்டிய லிட்டன் தாஸ்! மழைக்கு பின் இதுதான் இலக்கு!
இந்திய அணிக்கு தோல்வி பயம் காட்டிய லிட்டன் தாஸ்! மழைக்கு பின் இதுதான் இலக்கு!

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்ட நிலையில், மீண்டும் ஆட்டம் தொடங்கியுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை சிறப்பான இடத்திலேயே இருந்து வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தலான தொடக்கத்தை கொடுத்தது. நெதர்லாந்தை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தென்னாப்ரிக்கா அணியுடன் கடைசி ஓவர் வரை போராடியே தோல்வியை தழுவியது. இந்த நிலையில்தான் இன்று வங்கதேச அணியுடன் விளையாடி வருகிறது. வங்கதேச அணியை இந்திய அணி எளிதில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை வலுவடைய செய்யும் என்றே கணிக்கப்பட்டது.

184 ரன்கள் குவித்த இந்திய அணி!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. ரோகித், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் சொதப்பிய போது, கே.எல்.ராகுல், விராட் கோலியின் அரைசதத்தால் இந்திய அணி மீண்டது. விராட் கோலி 64 ரன்கள் விளாசினார். 185 ரன்கள் இலக்கு என்பதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய அணி மரண அடி கொடுத்த லிட்டன் தாஸ்!

இந்திய அணி நினைத்ததற்கு மாறாக களத்தில் நிகழ்ந்தது. புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவரில் அடக்கி வாசித்த லிட்டன் தாஸ், ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் இருந்து வான வேடிக்கை காட்டினார். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளை பறக்கவிட்டார். இடையிடையே சிக்ஸர் விளாசினார். 21 பந்திலேயே அரைசதம் விளாசி இந்திய அணிக்கு தோல்வி பயத்தை காட்டினார் லிட்டன் தாஸ். அரைசதம் அடித்த பின்னரும் அதிரடியை அவர் தொடர்ந்தார்.

மழையால் நிறுத்தப்பட்ட ஆட்டம்

வங்கதேச அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்து இருந்த போது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை பெய்து கொண்டே இருந்ததால் போட்டி நிறுத்தப்படும் என்ற நிலை உருவானது. ஒருவேளை ஆட்டம் நிறுத்தப்பட்டால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச அணி 17 ரன்களில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அதனால் வங்கதேச வீரர்கள் மகிழ்ச்சியில் மூழ்கினர்.

54 பந்துகளில் 85 ரன் இலக்கு!

சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 4 ஓவர்கள் குறைக்கப்பட்டு 9 ஓவர்களில் 85 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது அஸ்வின் பந்துவீசினார். அந்த ஓவரிலேயே லிட்டன் தாஸ் ரன் அவுட் ஆகினார். அவர் 27 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் மூன்று சிக்ஸர், 7 பவுண்டரி அடங்கும். 48 பந்துகளில் வங்கதேச அணி 77 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com