இன்னொரு தோனியா ஹர்மன்பிரீத் கவுர்

இன்னொரு தோனியா ஹர்மன்பிரீத் கவுர்

இன்னொரு தோனியா ஹர்மன்பிரீத் கவுர்
Published on

மகேந்திர சிங் தோனியைப் போன்று, ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவர் இந்திய மகளிர் அணியின் ஹர்மன்பிரீத் கவுர். 

28 வயதான ஹர்மன்பிரீத் கவுர் வீரத்துக்கு பெயர் பெற்ற பஞ்சாப் மண்ணின் கிரிக்கெட் நாயகி. 2009-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான இவர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நிபுணத்துவம் மிக்க ஆட்டக்காரர். தோனியைப் போலவே ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவர். இதற்கு எடுத்துக்காட்டு அண்மையில் நடந்த தென்னாப்ரிக்கா உடனான உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவை என்றபோதிலும், அதிரடியால் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார் கவுர். தகுதி சுற்றைத் தொடர்ந்து, உலகக்கோப்பை அரையிறுதியிலும் ஆறுமுறை உலகச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 171 ர‌ன்கள் குவித்து சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்மன்பிரீத் அசத்தியது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 2009ஆம் ஆண்டில் முதல் முறையாக தனது ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது கடைசி ஓவரில் இமாலய சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். அதிரடி ஆல்ரவுண்டராக வலம் வரும் ஹர்மன்பிரீத், ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் டி20 தொடரில் விளையாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார். மிதாலி ராஜ் இல்லாதபோது, கேப்டனாகவும் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திராமாக ஹர்மன்பிரீத் கவுர் திகழ்கிறார் என்பது மிகையில்லாத ஒன்றாகும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com