\
“நடிப்புலகில் முதல் படி ... தமிழ் மக்களுக்கு நன்றி” - இர்ஃபான் பதான் ட்வீட்

“நடிப்புலகில் முதல் படி ... தமிழ் மக்களுக்கு நன்றி” - இர்ஃபான் பதான் ட்வீட்

“நடிப்புலகில் முதல் படி ... தமிழ் மக்களுக்கு நன்றி” - இர்ஃபான் பதான் ட்வீட்
Published on

தமிழ் மக்களுக்கு தனது நன்றி என இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை அடுத்து, அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதில், பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது தொடர்பாக ஏற்கெனவே தனது ட்விட்டர் பக்கத்தில் இர்ஃபான் பதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். \

இந்நிலையில், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,“வணக்கம் மக்களே.. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி. முதல் schedule நல்லபடியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க ‘I'm waiting’” எனப் பதிவிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com