''குத்து குத்து கும்மாங்குத்து'' - சச்சினிடம் பாக்ஸிங் செய்த இர்ஃபான் பதானின் மகன்

''குத்து குத்து கும்மாங்குத்து'' - சச்சினிடம் பாக்ஸிங் செய்த இர்ஃபான் பதானின் மகன்

''குத்து குத்து கும்மாங்குத்து'' - சச்சினிடம் பாக்ஸிங் செய்த இர்ஃபான் பதானின் மகன்
Published on

உலக சாலைப் பாதுகாப்பு தொடர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் அணியை இந்திய லெஜெண்ட்ஸ் அணி வீழ்த்தி சனிக்கிழமை வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப் பிறகு, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உடன் இர்ஃபான் பதான் மகன் இம்ரான், பாக்ஸிங் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உலக சாலைப் பாதுகாப்பு தொடருக்கான கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய லெஜெண்ட்ஸ் அணியும், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் அணியும் விளையாடின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. சேவாக், சச்சின் என இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் விளையாடினர்.

பல வருடங்களுக்கு பிறகு சேவாக், சச்சின் ஜோடி களத்தில் விளையாடியதை கிரிக்கெட் ரசிகர்கள் ரசித்து பார்த்தனர். இந்த போட்டியில் சச்சின் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க சேவாக் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் எடுத்தார்.

இந்தப்போட்டிக்கு பிறகு இர்ஃபான் பதான் மகன் இம்ரான், சச்சின் டெண்டுல்கர் உடன் செல்லமாக விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் சச்சினுடன் குத்துச்சண்டை செய்வதுபோல இம்ரான் விளையாட்டாக குத்துகிறான். அந்த வீடியோவை பகிர்ந்த இர்ஃபான் பதான், இம்ரான் என்ன செய்தான் என்று அவனுக்கு இப்போது தெரியாது. ஆனால் அவன் வளர்ந்ததும் சச்சினுடன் பாக்ஸிங் செய்தோம் என்பது அவனுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com