கும்ப்ளேவுக்கு விருந்து வைத்த இர்ஃபான் பதான்

கும்ப்ளேவுக்கு விருந்து வைத்த இர்ஃபான் பதான்

கும்ப்ளேவுக்கு விருந்து வைத்த இர்ஃபான் பதான்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கு, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார்.

விராத் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகினார். இது தொடர்பாக இந்திய அணியில் உள்ள வீரர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், அனில் கும்ப்ளேவை தனது வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. விருந்து பற்றி இருவருமே ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் இர்ஃபான் பதான், “உங்களுக்கு பிரியாணி விருந்து அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு கும்ப்ளே, “இந்த விருந்தில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. பிரியாணிக்கு நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com