இர்பான் பதானின் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர் மிஸ்ஸிங்!
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியை தேர்ந்தெடுத்துள்ளார் இர்பான் பதான்.
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியை தேர்ந்தெடுத்துள்ளார்.
இர்பான் பதான் தேர்ந்தெடுத்த டி20 உலகக் கோப்பைக்கான ஆடும் 11 பேர்:
ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஹர்சல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரித் பும்ரா.
இர்பான் பதான் தேர்ந்தெடுத்துள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை. விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷராக தினேஷ் கார்த்திக்கை அவர் தேர்வு செய்துள்ளார். மேலும் இதில் விராட் கோலியை தேர்வு செய்தது குறித்து இர்பான் பதான் கூறுகையில், “சமீபத்திய போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடுவார்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்: இலங்கை - ஆஸி. போட்டியின்போது பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற நடுவர்.. வைரலாகும் புகைப்படம்!