தீபக் ஹூடா சதத்தால் 227 ரன்கள் குவித்த இந்திய அணி.. முதல் ஓவரிலேயே பயம் காட்டிய அயர்லாந்து

தீபக் ஹூடா சதத்தால் 227 ரன்கள் குவித்த இந்திய அணி.. முதல் ஓவரிலேயே பயம் காட்டிய அயர்லாந்து
தீபக் ஹூடா சதத்தால் 227 ரன்கள் குவித்த இந்திய அணி.. முதல் ஓவரிலேயே பயம் காட்டிய அயர்லாந்து

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது.  

இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது.

அதிரடியாக ஆடிய தீபக் ஹூடா சதம் விளாசினார். 57 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்சர்கள் உடன் 104 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். முன்னதாக தொடக்க வீரராக இறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணி கடைசி 3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதில் தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல் ஆகியோர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் அயர்லாந்து அணி ஆடிவருகிறது. இந்திய அணி சார்பில் முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரில் அயர்லாந்து வீரர் பவுல் ஸ்டிர்லிங் ஒரு சிக்ஸர் மூன்று பவுண்டரி விளாசினார். மொத்தம் அந்த ஓவரில் 18 ரன்கள் விளாசப்பட்டது. ஹர்ஷல் வீசிய இரண்டாவது ஓவரிலும் ஒரு சிக்ஸர் பறந்தது. அதேபோல், மூன்றாவது மற்றும் நான்காவது ஓவரிலும் தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசப்பட்டது. 5வது ஓவரில் இரண்டு சிக்ஸ்டர்கள் பறந்தது. 5 ஓவர்கள் முடிவில் 65 ரன்கள் எடுத்தது அயர்லாந்து.


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com