ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன் - அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன் - அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன் - அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார் அயர்லாந்து கிரிக்கட் அணியின் கெவின் ஓ பிரையன். அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர் அவர். கடந்த 2011 உலக  கோப்பை  தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 50 பந்துகளில் சதம் அடித்தவர். தற்போது அவருக்கு வயது 37.

அதன் மூலம் குரூப் சுற்றில் இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 2006இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் அவர். இதுவரை 153 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com