‘சிஎஸ்கே கொடிக்கு ஹைதராபாத் மைதானத்தில் அனுமதியில்லை’ - ரசிகர்கள் அதிருப்தி

‘சிஎஸ்கே கொடிக்கு ஹைதராபாத் மைதானத்தில் அனுமதியில்லை’ - ரசிகர்கள் அதிருப்தி
‘சிஎஸ்கே கொடிக்கு ஹைதராபாத் மைதானத்தில் அனுமதியில்லை’ - ரசிகர்கள் அதிருப்தி

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 33வது போட்டி சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி ஓய்வெடுத்துள்ளதால், அவருக்கு பதிலாக சென்னையின் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா தலைமை ஏற்றுள்ளார். மேலும் சென்னை அணியில் கீப்பராக பில்லிங்க்ஸும், புதிய பவுலராக கேவி ஷர்மாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே ஹைதராபாத் மைதானத்திற்குள் சென்ற சென்னை ரசிகர்களை, சிஎஸ்கே-வின் கொடியை எடுத்துச்செல்ல அனுமதியில்லை என்று அங்கிருந்த பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். இது நிர்வாக உத்தரவு என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை ரசிகர்கள் பலர் தாங்கள் கொண்டு வந்த கொடிகளை வெளியே விட்டுச்சென்றுள்ளனர். 

மேலும், சென்னை அணியின் தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால் ஹைதராபாத் ரசிகர்கள் மட்டும் கொடியை உள்ளே கொண்டு சென்றுள்ளதாக குற்றச்சாட்டுகளையும் சென்னை ரசிகர்கள் முன் வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com