ஐபிஎல் இன்றைய போட்டி: பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை

ஐபிஎல் இன்றைய போட்டி: பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை

ஐபிஎல் இன்றைய போட்டி: பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை
Published on

ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாயில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி நடப்பு சீசனில் விளையாடிய 8 போட்டிகளில் 3 -ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ராஜஸ்தான் அணி 12 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பிளே ஆஃப்க்குள் நுழைய இனி வரும் போட்டிகள் அனைத்தும் இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டிகளாக பார்க்கப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com